மீனவர் நலத்துறையில் - அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் :

மீனவர் நலத்துறையில்  -  அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்   :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் அறிக்கை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15 ஆயிரத்து 700 முதல் 50 ஆயிரம் வரை வழங்கப்படும். ஒரு பணியிடம் பொதுப் போட்டியாக நடத்தப்படும். அதில் பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை கிடையாது. வயதுவரம்பு 18 முதல் 30 வரை இருக்க வேண்டும். மேலும் ஒரு பணியிடத்துக்கு ஆதி திராவிடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயதுவரம்பு 18 முதல் 35 வரை இருக்க வேண் டும்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் (மண்டலம்) 166, வடக்கு கடற்கரை சாலை, திரேஸ்புரம், தூத்துக்குடி, (தொலைபேசி எண் 0461-2320673) என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று, உரிய ஆவணங்களுடன் செப்டம்பர் 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in