ராஜீவ் காந்தி சிலை, படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை :

காரைக்கால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ராஜீவ் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் சந்திர பிரியங்கா, ஆட்சியர் அர்ஜுன் சர்மா உள்ளிட்டோர்.
காரைக்கால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ராஜீவ் காந்தியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் சந்திர பிரியங்கா, ஆட்சியர் அர்ஜுன் சர்மா உள்ளிட்டோர்.
Updated on
1 min read

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, திருச்சி, கரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் நேற்று அவரது சிலை, படங்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, மாியாதை செலுத்தினர்.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு நேற்று காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில், மாநகர் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில் தெற்கு மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன், மாநில துணைத் தலைவர் சுப.சோமு, முன்னாள் மேயர் சுஜாதா, மாவட்டப் பொருளாளர் ராஜா நசீர், மாநில பொதுச் செயலாளர்கள் சரவணன், முரளி, இளங்கோவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ரெக்ஸ், முன்னாள் கவுன்சிலர் ஹேமா, மகளிர் அணி நிர்வாகிகள் ஷீலா, ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கரூர் மாவட்டத்தில்...

தஞ்சாவூர் மாவட்டத்தில்...

கும்பகோணத்தில்...

நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜான் கவுஸ் சாஹிப் தலைமை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்டச் செயலாளர் நவுஷாத் பேசினார். நிகழ்ச்சியில், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதில், மூத்த காங்கிரஸ் நிர்வாகி ஜலாலுதீன், நாகை மாவட்ட துணைத் தலைவர் வரதராஜன், விவசாய பிரிவு மாவட்ட அமைப்பாளர் நிக்கோலஸ், சிறுபான்மைத் துறை மாவட்டத் தலைவர் மக்சூத் சாஹிப், மாவட்ட மனித உரிமை துறை துணைத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில், நகரச் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

காரைக்காலில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in