

தூத்துக்குடியில் சவரத் தொழிலாளர்கள் சங்க 41-வது ஆண்டு விழா மற்றும் மகாசபை கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சண்முகவேல் முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவராக சுப்பிரமணியன், செயலாளராக முத்தரசு, பொருளாளராக பாலசரவணவேல், துணைத் தலைவராக பண்டார பலவேசமுத்து, துணைச் செயலாளராக நாராயணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர்.
முடிதிருத்தும் மருத்துவ சமுதாய மக்களில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.