

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீஸார் கடந்த 18-ம் தேதி இரவு, சூளகிரி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சிங்காரப்பேட்டை தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். போலீஸார், அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர்.
பின்னர் அவ்வழியே போலீஸார் வாகனத்தில் திரும்பி சென்றபோது, மது அருந்தியவர்கள் போலீஸ் வாகனத்தின் மீது மதுபாட்டிலை வீசினர். இதில் போலீஸார் வாகனத்தின் கண்ணாடி, கதவு சேதமடைந்தது.இதுதொடர்பாக ராயக் கோட்டை கொப்பகரை பகுதியைச் சேர்ந்த விஜய் (21), ஜெயசீலன் (21) ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.