‘கன்னிப்பேச்சு’ என்பதை மாற்றவேண்டும்: : வானதி சீனிவாசன் :

‘கன்னிப்பேச்சு’ என்பதை மாற்றவேண்டும்: : வானதி சீனிவாசன் :
Updated on
1 min read

சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் முதல் பேச்சை ‘கன்னிப் பேச்சு’ என்று கூறுவதை மாற்ற வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் பேசிய வானதி சீனிவாசன், ‘‘வழக்கமாக சட்டப்பேரவையில் முதல் பேச்சை ‘கன்னிப்பேச்சு’ என்று குறிப்பிடுகிறீர்கள். ‘கன்னி’என்ற வார்த்தை, பெண்ணினத்தை, இளம்வயது பெண்ணை குறிக்கும்வார்த்தை. என்னைப் பொறுத்தவரை இந்த முதல் பேச்சை, ‘கன்னிப் பேச்சு’ என்று குறிப்பிடாமல், அறிமுகப் பேச்சு,முதல் பேச்சு என்று குறிப்பிட்டால் நாகரிகமாக இருக்கும். ‘கன்யா’ என்றசம்ஸ்கிருத சொல்லில் இருந்து உருவானது ‘கன்னி. எனவே அழகு தமிழில் வேறு வார்த்தையில் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ‘‘யாரும் இங்கு அதைப்பயன்படுத்தவில்லை. நீங்கள் சொன்ன ஆலோசனையை ஏற்கிறோம்’’என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in