சாலையோரம் 100 மரங்கள் அகற்றம் :

சாலையோரம் 100 மரங்கள் அகற்றம் :
Updated on
1 min read

ஓசூர் வட்டம் தேவகானப்பள்ளி, கூலிசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

ஓசூர் - -தேன் கனிக்கோட்டை பிரதான சாலையில் இருந்து தேவகனப் பள்ளி மற்றும் கூலிசந்திரம் நோக்கி செல்லும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலை 20 அடிக்குமேல் அகலம் உள்ளது. இது போக்கு வரத்துக்கு போதுமானதாக உள்ளது. ஆனால் சாலையை மேலும் அகலப்படுத்துவதாகக் கூறி சாலையின் இருபுறமும் உள்ள 100-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுகின்றனர்.

இது தொடர்பான புகாரைத் தொடர்ந்து ஓசூர் தொகுதி மேம்பாட்டு அலுவலர் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலை அமைப்பதாகக் கூறி, 100 மரங்களை அகற்றிவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in