

தஞ்சாவூர் மாரியம்மன் கோவி லைச் சேர்ந்தவர் விஜய குமார்(58). இவர், திருவோணம் ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர், தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் சிலநாட்களுக்கு முன்பு தகராறு செய்து, ஆபாசமாக திட்டியதாக கூறப் படுகிறது.
மேலும், அந்த பெண் ஊழியர், குடும்பத்தினர் குறித்து அவதூறான தகவல்களை அவரின் உறவினர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.