

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதம் தோறும் உண்டியல்கள் எண்ணப்படுகின்றன. ஆகஸ்ட் மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி தலைமை வகித்தார்.தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலை வகித்தார். உண்டியல் எண்ணும் பணியில் உதவி ஆணையர்கள் செல்வராஜ், கண்ணதாசன், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் முருகன், இசக்கிசெல்வம், பொதுமககள் பிரதிநிதிகள் வேலாண்டி ஓதுவார், சிவகாசி பதினென்சித்தர் மடம் வேதபாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.1 கோடியே 73 லட்சத்து 45 ஆயிரத்து 160, தற்காலிக உண்டியல்கள் மூலம் ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 319 என, மொத்தம் ரூ.1 கோடியே 76 லட்சத்து 19 ஆயிரத்து 479 கிடைத்தது. தங்கம் 1,250 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 261-ம், வெள்ளி 39,350 கிராம் காணிக்கையாக கிடைத்தன.