

குடிநீர் வழங்க வலியுறுத்தி திருப் பத்தூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் 8-வது தெருவைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பெண்கள் கூறும்போது, ‘‘நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் மொத்தம் 8 தெருக்கள் உள்ளன. இதில், 1 முதல் 7-வது தெருவைச் சேர்ந்த குடியிருப்பு மக்களுக்கு நகராட்சி சார்பில் காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
8-வது தெருவில் காவிரி கூட்டுக் குடிநீர் இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் வழங் கப்பட்டிருந்தாலும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் இல்லாததால் அருகாமை யில் உள்ள தெருக்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். எங்கள் தெருவில் 100-க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன.
இதில், 80 சதவீதம் வீடுகளுக்கு காவிரி கூட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும், குடிநீர் வருவ தில்லை. இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பல முறை கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இதைக் கண்டித்தும், காந்தி நகர் 8-வது தெருவுக்கு உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி முற்றுகைப்போராட்டம் நடத்தி வருகிறோம்’’ என்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி அலுவலர்கள் பெண் களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, 8-வது தெருவில் விரைவில் குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும், அதுவரை டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று, பெண்கள் முற்றுகைப் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.