நெல் கொள்முதல் நிலையங்களில் தி.மலை மாவட்ட ஆட்சியர் ஆய்வு :

தூசி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் பா.முருகேஷ்.
தூசி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் பா.முருகேஷ்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த 16-ம் தேதி முதல் செயல்படுகிறது. இந்நிலையில், செய்யாறு அடுத்த வெம்பாக்கம், தூசி, பெருங்கட்டூர் கிராமங்களில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறும்போது, "நெல் மூட்டைகளை விற்பனை செய்ய https://tvmdpc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இணையதள வழியில் முன்பதிவு செய்து வழங்கப்பட்ட தேதியில் மட்டுமே நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வர வேண்டும்’’என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in