விழுப்புரம் தெய்வானை அம்மாள் கல்லூரியில் சுதந்திர தினவிழா :

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
Updated on
1 min read

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர்கல்லூரியில் நடைபெற்ற 75-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கல்லூரி முதல்வர் பிருந்தா தேசியக் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் சுதந்திர போராட்ட வரலாற்றின் தன்மைகள்,விடுதலை வரலாற் றில் முக்கிய நிகழ்வுகள்,சுதந்திரத்தின் தேவைகள், இன்றைய இளைய சமுதாயம் நடை முறைவாழ்வில் பொறுப்புடன் சுதந்திரத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினார். தேர்வு கட்டுப்பாட்டாளரான பேராசிரியர் தேவி முதல்வருக்கு நினைவு பரிசை வழங்கினார். முன்னதாக கல்லூரி மாணவியர் பேரவைத் தலைவி சாய் காயத்ரி சிறப்பு விருந்தினரை வரவேற்று, அறிமுகவுரையாற்றினார். கல்லூரி தேசிய மாணவர் படையின் சீனியர் அண்டர் ஆபீஸர் விஷ்ணுதேவி உறுதி வாசித்தார். இவ்விழாவில் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.கல்லூரி மாணவியர் பேரவை துணைத்தலைவி ரஹ்மத் நிஷா நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in