செஞ்சி அருகே - மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் :

மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து செஞ்சி அருகே ஆலம்பூண்டி - நடுப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் .
மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து செஞ்சி அருகே ஆலம்பூண்டி - நடுப்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் .
Updated on
1 min read

செஞ்சி அருகே ஆலம்பூண்டி - நடுப்பட்டு சாலையில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில் கோயில்அமைந்துள்ள இடம் மற்றும் மரங்கள் உள்ள இடம் தனக்குசொந்தமானவை என ஆலம்பூண் டியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவர் டிராக்டருடன் சென்றுஅவைகளை வெட்ட முயன் றுள்ளார்.

இதை அறிந்த அக்கிராம மக்கள் மரங்களை வெட்டக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருவண்ணாமலை - செஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக் குவரத்து தடைபட்டது. இத்தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீ ஸார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர். மேலும் மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in