விவரங்கள் சேகரிப்பில் முரண்பாடு - வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலைநிறுத்தம் :

விவரங்கள் சேகரிப்பில் முரண்பாடு -  வேளாண் கூட்டுறவு சங்க பணியாளர்கள் வேலைநிறுத்தம் :
Updated on
2 min read

நகைக் கடன், பயிர்க் கடன் உள்ளிட்டவை மீதான தள்ளுபடி நடவடிக்கைகளுக்காக தினமும் வெவ்வேறு வகையான விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்படுவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகக்கூறி, சேலம் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாளர்கள் நேற்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் 203, நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் 5, லேம்ப் கூட்டுறவு கடன் சங்கங்கள் 5, நில குடியேற்ற கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க சேலம் மாவட்ட தலைவர் மாரிமுத்து, செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கூறியதாவது:

கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன். நகைக்கடன் மற்றும் மகளிர் குழுக்கடன் தொடர்பான புள்ளி விவரம் வெவ்வேறு வகையான படிவங்களில் தினசரி கேட்கப்படுகிறது. ஆனால், இதற்கான உரிய கால அவகாசம் வழங்கப்படுவதில்லை. இதனால், பணியாளர்கள் புள்ளி விவரம் சேகரிப்பதில் சிரமப்படுவதுடன் மிகுந்த மன உளைச்சலுடன் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, புள்ளி விவரங்கள் சேகரிக்க உரிய அவகாசம் வழங்க வேண்டும்.

கடன் தள்ளுபடிக்காக பலரும் அடகு நகைகளை மீட்காமல் உள்ளனர். இதனால், அவை மீட்கப்படாமல் நிலுவை ஏற்பட்டுள்ளது. தள்ளுபடி திட்டத்தில் இடம் பெறாத நகைகள் ஏல நடவடிக்கை உட்படுத்தும் பொழுது நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை கூட்டுறவு கடன் சங்கங் களில் வரவு செலவு பாதிக்கப் பட்டுள் ளது. இதனால், கடன் சங்கப் பணி யாளர் களில் பெரும் பாலான வர்கள், ஊதிய மின்றி பணி புரிந்து வருகின்ற னர்.

வைப் புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு முதிர்வுத் தொகை வழங்க போதிய நிதி ஆதாரம் இல்லாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் பொருட்களை எடைபோட்டு வழங்க இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே, 500 ரேஷன்கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளில், எடையாளர் பணியிடம் உருவாக்கி பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாமக்கல்லில் போராட்டம்

பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் தொடர்பான புள்ளி விவரம் தினமும் கேட்கப்படுகிறது. அதற்கு உரிய அவகாசம் வழங்காமல் மாலை 3 மணிக்கு தெரிவித்து உடனே வழங்க நிர்பந்தம் செய்கின்றனர்.

மேலும், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பெரும்பாலான பணியாளர்கள், விற்பனையாளர்கள் ஊதியமின்றி பணிபுரிந்து வருகின்றனர். 500 ரேஷன் கார்டுக்கு மேல் உள்ள கடைகளில், எடையாளர்கள் பணியிடம் உருவாக்கி நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 167 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 165 சங்கங்கள் பங்கேற்றுள்ளன. அதேபோல் ரேஷன் கடைகளில் பணிபுரியும் 55 சதவீதம் பணியாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in