

காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு சில நாட்களாக நீர்வரத்து குறைந்து வருகிறது.
அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4 ஆயிரத்து 934 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று விநாடிக்கு 4 ஆயிரத்து 171 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் 71.05 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 69.98 அடியாக குறைந்தது. நீர்இருப்பு 32.68 டிஎம்சி-யாக உள்ளது.