ஆலங்குடியில் இலவச பயிற்சியுடன் - இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் :

ஆலங்குடியில் இலவச பயிற்சியுடன் -  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஊராட்சியில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான இலவச தொழில்நுட்பப் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மகளிர் திட்ட உதவி அலுவலர் மணிகண்ணன் தலைமை வகித்தார். முகாமில் கணினி பயிற்சி, அழகுக் கலை பயிற்சி, ஏ.சி மெக்கானிக், நர்சிங் மற்றும் செல்போன் மெக்கானிசம் ஆகிய பயிற்சிகளை வழங்குவதற்காக முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.

வலங்கைமான் ஒன்றியத்துக்குட்பட்ட 50 கிராம ஊராட்சிகளைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜாத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வலங்கைமான் வட்டாரச் செயலாளர் தனலட்சுமி முகாமை ஒருங்கிணைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in