பாராட்டு :

பாராட்டு :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகரில் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து, பெரிய மரங்களாக வளர்த்தெடுத்த இளைஞர்களுக்கு பாராட்டு விழா, கண்காணிப்பு கேமரா அமைப்பு தொடக்க விழா ஆகியவை நேற்று நடைபெற்றன.

விழாவுக்கு, ஆர்.பி.சிவம் நகர் நலச் சங்கத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் ராஜதுரை வரவேற்றார். மன்னார்குடி டிஎஸ்பி இளஞ்செழியன், கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டைத் தொடங்கிவைத்தார். மரக்கன்றுகளை நட்டு, பராமரித்த இளைஞர்களுக்கு மன்னார்குடி நகராட்சி ஆணையர் செண்ணு கிருஷ்ணன், வட்டாட்சியர் ஜீவானந்தம், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் பாராட்டு தெரிவித்து, சால்வை அணிவித்தனர். முடிவில், பொருளாளர் மாரிமுத்து நன்றி தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in