புதிய ரேஷன் அட்டை பெற கூட்டம் :

பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு வரிசையில் காத்திருந்தவர்கள்.                                 படம்: மு.லெட்சுமி அருண்.
பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு வரிசையில் காத்திருந்தவர்கள். படம்: மு.லெட்சுமி அருண்.
Updated on
1 min read

பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல், கரோனா பரவல் காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து வழங்கப்படவில்லை. புதிய ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அட்டைகள் அச்சிடும் பணி சென்னையில் நடைபெற்றது. இந்த அட்டைகள் 2 நாட்களுக்குமுன் தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த ஸ்மார்ட் அட்டைகளை விநியோகிக்கும் பணிபாளையங்கோட்டை தாலுகாஅலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த அட்டைகளை பெற்றுக்கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கடந்த வாரத்தில் குறுந்தகவல் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி தாலுகா அலுவலகங்களில் புதிய ரேஷன் அட்டைகளை பெறுவதற்கு நேற்று காலை 7 மணியிலிருந்தே கூட்டம்காணப்பட்டது. அனைவரையும் வரிசையில் நிற்க செய்தபின் அட்டைகள் ஒவ்வொருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. ஆதார் அட்டையின் நகல், செல்போனில் வந்த குறுந்தகவல்களை காட்டி அட்டைகளை பொதுமக்கள் பெற்றுச்சென்றனர். பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் மட்டும் 400-க்கும் மேற்பட்டோருக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in