தமிழகத்தில் ஆக.23 முதல் 27 வரை - 5,000 இடங்களில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் : இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் தகவல்

திருச்சியில் நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசுகிறார் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன்.
திருச்சியில் நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசுகிறார் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன்.
Updated on
1 min read

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு, மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலச் செயலா ளர் ஆர்.முத்தரசன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

டெல்லியில் கடந்த 9 மாதங் களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அரசியல் கட்சி களின் தலைவர்கள், பத்திரிக் கையாளர்கள், சமூக ஆர்வலர் கள் உள்ளிட்ட பலரின் தொலை பேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட் டுள்ளது. ஆனால், இதுகுறித்தோ, மக்களின் பிரச்சினைகள் குறித்தோ நாடாளுமன்றத்தில் பேச அனுமதி அளிப்பதில்லை.

எனவே, ஆக.23 முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் 5,000 இடங்களில் மக்கள் நாடாளு மன்ற கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இவற்றில் தீர்மானங்களை நிறைவேற்றி, நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது வரலாற்று சிறப்புமிக்க செயல்.

நெல் கொள்முதல் நிலையங் களுக்கு, பல இடங்களில் நிரந்தரக் கட்டிடங்கள் உள்ளன. சில இடங்களில் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களாக உள்ளன. எனவே, அனைத்து இடங்களிலும் போதிய கட்டிடங் களைக் கட்டி, நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களாக மாற்ற வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில், எம்.பி கே.சுப்பராயன், மாநில துணை பொதுச் செயலாளர் வீரபாண் டியன், மாநகர் மாவட்டச் செயலாளர் திராவிடமணி, முன் னாள் எம்எல்ஏக்கள் பழனிசாமி, ஆறுமுகம், நஞ்சப்பன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in