

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கும் நிகழ்ச்சி, திருவண்ணாமலை அடுத்த கீழ்அணைக்கரையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
முதுகு தண்டுவடம் காய மடைந்தோர் அமைப்பு மற்றும் மோட்டிவேஷன் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுதிறனாளிகள் மாவட்ட அலுவலர் ஜோதிலிங்கம் தலைமை வகித்தார். பின்னர் அவர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 40 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் என ரூ.10 லட்சம் மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
முதுகு தண்டுவடம் பாதிக்கப் பட்டவர்கள், மற்றவர்கள் உதவி இல்லாமல் பல்வேறு இடங்களுக்கு செல்ல சிறப்பு வாகனம் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், மேலும் பலரை கண்டறிந்து சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்படும் என அமைப்பு நிர்வாகிகள் தெரி வித்தனர்.