கீழ்புத்துப்பட்டு கோயிலில் வரும் 16-ம் தேதி தரிசனத்திற்கு தடை :

கீழ்புத்துப்பட்டு கோயிலில் வரும் 16-ம் தேதி தரிசனத்திற்கு தடை :
Updated on
1 min read

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக் கையாக தற்போது வெள்ளி,சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களை மூடிட அரசு உத்த ரவிட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 16-ம் தேதி ஆடி 5-ம் திங்கள்கிழமையை முன்னிட்டு மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள மஞ்சனீஸ்வரர் திருக் கோயிலுக்கு பக்தர்கள் அதிக ளவில் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வரும் 16-ம் தேதி இக்கோயிலில் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

ஆனால் ஆகம விதிப்படி சாமி அலங்காரங்கள். பூஜைபுனஸ்காரங்கள் ஆகியவை அர்ச்சகர்கள், திருக் கோயில்அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் நடத்திக் கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in