கடலூரில் "உங்கள் தொகுதியில் முதல்வர்" திட்டத்தில் - 4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் :

கடலூரில் "உங்கள் தொகுதியில் முதல்வர்" திட்டத்தில் -  4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல் :
Updated on
1 min read

கடலூரில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் "உங்கள் தொகுதியில் முதல்வர்" திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மொத்த மனுக்கள் 19 ஆயிரத்து 116 ஆகும். இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டன.

இதனைத்தொடர்ந்து கடந்த 10-ம் தேதி அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் 108 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிதியின் கீழ் "உங்கள் தொகுதியில் முதல்வர்" திட்டத்தின் மூலம் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.40 ஆயிரத்துக்கான காசோ லையினை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வழங்கி னார்.

கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜித்சிங், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) வெங்கடேசன், உதவிப்பொறி யாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in