தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு :

தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு  :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம், என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நடப்பாண்டு உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழறிஞர் உதவித்தொகை பெற 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ்வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு, மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3500 மற்றும் மருத்துவப்படி ரூ.500 அவரது வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ்வளர்ச்சித் துணைஇயக்குநர் அலுவலகத்தில், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in