சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘ஆரோக்கிய ஓட்டம்’ :

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் ஆரோக்கிய ஓட்டம் நடைபெற்றது.
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் ஆரோக்கிய ஓட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் ஆரோக்கிய ஓட்டம் என்ற நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் ராஜரத்தினம், மாவட்ட நேருயுவ கேந்திரா இளைஞர் நல அலுவலர் சுஷில்பரஷ் ராம்பாட், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருமலை சிலம்பப்பள்ளி இளையோர் மன்றம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பாரம்பரிய தமிழ் விளையாட்டு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.

நாட்டின் 75 ஆண்டுகால கலாச் சாரம், வளர்ச்சி ஆகியவற்றை போற்றும் வகையில் இதுபோன்ற நிகழ்வை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருந்தார். நாடு முழுவதும் 744 மாவட்டங்களில் இந்த ஓட்டம் வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 75 கிராமங்களில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in