கடலூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி, கல்லூரிகளை உரிய பாதுகாப்புடன் திறக்க வேண்டும் : கடலூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published on

பள்ளி, கல்லூரிகளை உரிய பாதுகாப்புடன் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று கடலூர் ஜவான் பவன் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட குழு உறுப்பினர் கார்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளரும், கடலூர் மாவட்ட பொறுப்பாளருமான ஆறுபிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் லெனின், மாவட்ட துணைத் தலைவர் ஆகாஷ், மாவட்ட குழு உறுப்பினர் சுதின் பாரதி, சுகினா பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி, கல்லூரிகளை உரிய பாதுகாப்புடன் திறக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் இலவச தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும்.

கரோனா மையமாக செயல்பட்ட கல்வி வளாங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பு பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன.

கரோனா மையமாக செயல்பட்ட கல்வி வளாங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பு பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in