செஞ்சி சத்தியமங்கலத்தில் ரூ.1. 62 கோடியில் - மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் : பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்

செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து அமைச்சர் மஸ்தான் தொடக்கி வைத்தார்.
செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து அமைச்சர் மஸ்தான் தொடக்கி வைத்தார்.
Updated on
1 min read

செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் போக்குவரத்துத் துறை சார்பாக 587 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.1. 62 கோடி மதிப்பீட்டில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கட்டும் பணியை அமைச்சர் மஸ்தான் நேற்று பூமி பூஜை மூலம் தொடக்கி வைத்தார். ஆட்சியர் மோகன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விழுப்புரம் வெங்க டேசன், திண்டிவனம் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிட வளாகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, தனி உதவியாளர் அறை,கணினி அறை, உரிமம் பதிவு அறை,அலுவலக அறை, பதிவு அறை, காத்திருப்பு அறை, முகப்பு வர வேற்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படும். மோட் டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டிட வளாகத்தில் தீயணைப்பு கருவிகள் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத் தப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in