சைபர் குற்றப் புகார்களை 155260 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்: எஸ்.பி :

சைபர் குற்றப் புகார்களை 155260 என்ற  எண்ணில் பதிவு செய்யலாம்: எஸ்.பி :
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் சைபர் க்ரைம் போலீஸார் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 27 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கரூர் எஸ்.பி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த எஸ்.பி ப.சுந்தரவடிவேல் 27 செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.

அப்போது, அவர் பேசியது:

சைபர் க்ரைம் போலீஸார் மூலம் ஆன்லைன் குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வங்கிகளில் இருந்து பேசுவதாக கூறி ஓடிபி எண்கள் கேட்பவர்களிடம் ஓடிபி எண்களை பகிராதீர்கள்.

சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்தும்போது, அவர்கள் சில சமயங்களில் தவறான வழிகளில் செல்ல வாய்ப்புள்ளது. எனவே, குழந்தைகள் தவறான பாதையில் சென்றுவிடாமல் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஆன்லைன் பண மோசடி உள்ளிட்ட சைபர் க்ரைம் தொடர்பான புகார்களை தெரிவிக்க 155260 என்ற கட்டணமில்லா எண் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களை நேரடியாக இதில் பதிவு செய்யலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in