

விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன்வளக் கொள்கை வரைவு 2020-ஐ திரும்பப்பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், மீன்வர் குறைதீர் நாள் கூட்டம் நடத்த வேண்டும், மீன் விற்பனையாளர்களுக்கும் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகரில் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.
விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவில் தொடங்கிய இப்பேரணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலரும் முன்னாள் எம்.பி.யுமான பி.லிங்கம் தொடங்கிவைத்தார்.
நகராட்சி அலுவலகம், தெப்பம், பஜார் வழியாக தேசபந்து திடல் வரை இப்பேரணி நடைபெற்றது.