

திருநெல்வேலி அருகே ஓமநல்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆறுமுகம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை போலீஸார் கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணை யில், தனக்கு 5 சகோதரர்கள் இருப்பதாகவும், தனக்குள்ள சொத்து பாகம் 57 சென்ட் இடத்தை அவர்கள் தரமறுப்பதாகவும், அதனால் மனமுடைந்து மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க வந்ததாகவும் தெரிவித்தார். போலீஸார் அவருக்கு ஆலோசனைகளை வழங்கி கோரிக்கை மனுவை அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.