

தேனி மாவட்டம், பாரஸ்ட் ரோடு பாரதி தெருவைச் சேர்ந்தவர் செந்தாமரை. அரசு உதவிபெறும் தையல் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஆபிரகாம் (54). இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். ஆபிரகாம், வில்லிபுத்தூரில் வசித்துவந்த நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் தேனி அரண்மனைப்புதூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் உறவினர்கள் சிலர் ஆபிரகாம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செந்தாமரை புகாரின் பேரில், ஆபிரகாம் உடல் எடுக்கப்பட்டு தேனி போலீஸார் முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது.