

ஈரோடு அஞ்சல் கோட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் வரும் 16-ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து ஈரோடு முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு அஞ்சல் கோட்ட பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்,முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 16-ம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை நடக்கிறது. அஞ்சல் துறையின் சேவைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி வரும் 11-ம் தேதிக்குள், ‘முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர்’ ஈரோடு - 638001’என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உறையின் மேல்பகுதியில், குறைகேட்பு நாள் மனு என்று குறிப்பிட வேண்டும். முழு விவரத்துடன் எழுதப்பட்ட புகார் மனுக்களை நேரிலும் வழங்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.