சட்ட மாணவி பலாத்காரம் // பாஜக பிரமுகர் மீது வழக்கு :

சட்ட மாணவி பலாத்காரம் // பாஜக பிரமுகர் மீது வழக்கு :
Updated on
1 min read

சிவகங்கையில் சட்ட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக பிரமுகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கையைச் சேர்ந்த 20 வயது பெண், தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வருகிறார். அவருக்கும் சிவகங்கை அருகே குமாரப்பட்டியைச் சேர்ந்த பாஜக நகர இளைஞரணி பொதுச் செயலாளரும், புகைப்பட கலைஞருமான பாரத்லால் (எ) லால்சரண்க்கும் (25) இடையே பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் அப்பெண் போலீஸில் அளித்துள்ள புகார் மனுவில், பாரத்லால் கடைக்குச் சென்றபோது தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, பலாத்காரம் செய்ததாகவும், அதனை புகைப்படம் எடுத்து மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். அதன் பேரில் பாரத்லால் மீது சிவகங்கை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in