

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2095 கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ள நிலையில், காவிரி ஆற்றில் நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 3,403 கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை விநாடிக்கு 2,095 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நீர் வரத்தை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், அணை நீர் மட்டம் குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் 79.51 அடியாக இருந்த அணை நீர் மட்டம், நேற்று காலை 78.40 அடியாக குறைந்துள்ளது. அணையில் 40.38 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.