ஐடிஐ-ல் மாணவர் சேர்க்கை :

ஐடிஐ-ல் மாணவர் சேர்க்கை :
Updated on
1 min read

பர்கூர் ஐடிஐயில் ஒரு சில காலியிடங் களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக ஐடிஐ முதல்வர் சுப்பிரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 2021-22-ம் ஆண்டிற்கு நிர்வாக ஒதுக்கீட்டிற்கான சேர்க்கை போக மீதமுள்ள ஒரு சில காலியிடங்களுக்கு மட்டும் நேரடிச் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கணினி இயக்குநர்மற்றும் திட்ட உதவியாளர், உணவு தயாரித்தல் மற்றும் மின்சார பணியாளர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. அரசு இட ஒதுக்கீட்டின்படி ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கு மறு வாய்ப்பு மற்றும் புதிதாக விண்ணப்பித்தும் நேரடி சேர்க்கை மதிப்பெண்கள் தரவரிசைப்படி சேர்க்கை செய்யப்படும்.

ஆண்களுக்கு 40 வயது, பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. அனைத்து அசல் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள் இரண்டு, விண்ணப்பதாரர் மற்றும் தாய், தந்தையின் ஆதார் நகல்கள் 2 ஆகியவற்றுடன் பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து சேரலாம். மேலும் விவரங்களுக்கு, 04343-265652 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in