

தி.மலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த புதுப் பாளையம் கிராமத்தில் வசித்தவர் சாந்தி(45). இவர், நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து கண்ண மங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அதே கிராமத்தில் வசிக்கும் வேல்முருகனை(47) நேற்று முன்தினம் பிடித்து விசாரணை நடத்தியதில், “சாந்திக்கும், வேல்முருகனுக்கு கடந்த 3 ஆண்டுகளாக கூடா நட்புஇருந்து வந்ததும், அவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் சாந்தியை கொலை செய்ததும்’’ தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.