

ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல்துறையில் காப்பீடு முகவராகப் பணியாற்றுவதற்கான நேர்காணல் வரும் 12-ம் தேதி நடக்கிறது.
இது தொடர்பாக ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் முகவராகப் பணியாற்ற விரும்புவோருக்கான நேர்காணல், ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் வரும் 12-ம் தேதி மதியம் 2 மணியளவில் நடக்கவுள்ளது. முகவராகப் பணியாற்ற பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய தொழில் வேலை தேடும் இளைஞர்கள் உள்ளிட்ட 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். ஆயுள் காப்பீடு திட்டத்தில் முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். முகவர் பணியிடம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0424 -2258966 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.