

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (73). ஓய்வுபெற்ற உதவி தலைமை ஆசிரியர். இவரது மனைவி பிரேமா (68). இருவரும் சேலத்தில் உள்ள நண்பரின் வீட்டு விசேஷத்துக்கு வந்தனர். சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து நகரப் பேருந்தில் பழைய பேருந்து நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து பட்டைக்கோயிலுக்கு ஷேர் ஆட்டோவில் வந்தனர்.
இறங்கும் முன்னர் தாங்கள் கொண்டு வந்த பையை பார்த்தபோது, அதில் இருந்த 10 பவுன் நகை, செல்போன், ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. ஆட்டோவில் தேடியும் கிடைக்கவில்லை.
சேலம் டவுன் போலீஸார் விசாரிக்கின்றனர்.