கொடைக்கானல் வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு :

கொடைக்கானல் வரும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு :
Updated on
1 min read

கொடைக்கானலுக்கு கேரளா உட்பட வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்கள் 72 மணி நேரத்துக்குள் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இந்த விவரங்களைச் சோதனைச்சாவடியில் சரி பார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

மேலும், கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை ஆகியவை ஏற்கெனவே மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களான வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, ஐந்து வீடு நீர்வீழ்ச்சி, கூக்கால் நீர்வீழ்ச்சி, டால்பின் முனை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.கரோனா தொற்று நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in