பாளை. மத்திய சிறையில் - 20 ஆண்டுகளில் 133 கைதிகள் மரணம் :

பாளை. மத்திய சிறையில் -  20 ஆண்டுகளில் 133 கைதிகள் மரணம் :
Updated on
1 min read

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த 20 ஆண்டுகளில் 133 கைதிகள் மரணமடைந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் மரணம் தொடர்பான விவரங்களை , தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா கேட்டிருந்தார்.

இதற்கு மத்திய சிறை உதவி பொது தகவல் அலுவலர் மற்றும் சிறை அலுவலர் அளித்துள்ள பதில்:

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2000-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை 133 கைதிகள் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் இறந்துள்ளனர். இவர்களில் 10 பேர் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை முயற்சி செய்த கைதிகளின் விவரம் தொடர்பாக பதிவேடுகள் தனியாக பராமரிக்கப்படுவதில்லை. கைதிகள் தற்கொலை முயற்சி செய்வதை தடுப்பதற்கு தனியாக அலுவலர்கள் நியமிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க மனநல அலுவலர் மற்றும் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in