

தூத்துக்குடி மாவட்டத்தில் மது, கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கஎஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் தூத்துக்குடி வடபாகம், திருச்செந்தூர், பசுவந்தனை, கயத்தாறு, புதூர், மாசார்பட்டி, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 6 காவல்நிலையப் பகுதிகளில் மதுவிற்பனை செய்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் தூத்துக்குடி வடபாகம், மத்தியபாகம், தென்பாகம், தாளமுத்துநகர், ஆறுமுகநேரி ஆகிய காவல் நிலைய பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த8 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 570 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், தூத்துக்குடி வடபாகம், மத்தியபாகம், தென்பாகம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, விளாத்திகுளம், புதூர்மற்றும் காடல்குடி ஆகிய9 காவல் நிலைய பகுதிகளில் புகையிலை பொருட்களை விற்பனைசெய்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 84 புகை யிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.