மத்திய அமைச்சரிடம் எம்பி மனு :

மத்திய அமைச்சரிடம் எம்பி மனு :
Updated on
1 min read

ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம் சத்திரக்குடி வழியாக இரண்டு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவு படுத்தும் திட்டத்தை மாற்றி அமைக்குமாறு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி புதுடெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து, சத்திரக்குடி நான்கு வழிச்சாலை வழித்தடத்தை மாற்றி அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன்.

தற்போதுள்ள நான்கு வழிச்சாலை திட்டத்தின் கீழ் சத்திரக்குடியில் நிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். சத்திரக்குடி மக்கள் பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் கிராமத்தின் வளர்ச்சிக்கு பயனளிப்பதாக அமையும் என அமைச்சரிடம் விளக்கினேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in