சிவகங்கையில் 50 ஹாக்கி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் :

விளையாட்டு உபரணங்களைப் பெற்றுக்கொண்ட ஹாக்கி வீரர்கள்.
விளையாட்டு உபரணங்களைப் பெற்றுக்கொண்ட ஹாக்கி வீரர்கள்.
Updated on
1 min read

சிவகங்கை நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஏழை மாணவர்களைக் கண்டறிந்து பயிற்சி அளித்து வருகிறது.

இந்த அமைப்பு 50 ஹாக்கி வீரர்களுக்கு சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி அளிக்கிறது. மேலும் அந்த வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நேஷனல் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் தலைவர் பாரூக் தலைமை வகித்தார்.

சிவகங்கையைச் சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரரும், வெலோசஸ் பொறியியல் சேவைகள் நிறுவன இயக்குநருமான பிரகாஷ் உபகரணங்களை வழங்கினார். வழக்கறிஞர் செந்தில்குமார் மற்றும் மனோகர் சுவாமிநாதன் மாணவர்களுக்குச் சீருடைகளை வழங்கினர்.

மன்னர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் அபுதாகிர், முருகன், மாவட்ட ஹாக்கி கழகச் செயலாளர் முருகேசன், பயிற்றுநர் நாகுமணி, மாவட்ட தடகளப் பயிற்சியாளர் ஆறுமுகம், கால்பந்து பயிற்சியாளர்கள் கார்த்தி, சிக்கந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in