திருவெறும்பூர் கிளை நூலகத்துக்கு - முறையான பாதை வசதி இல்லாததால் வாசகர்கள் அவதி :

திருவெறும்பூர் பழைய ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அமைந்துள்ள கிளை நூலகம். படம்: எஸ்.கல்யாணசுந்தரம்
திருவெறும்பூர் பழைய ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அமைந்துள்ள கிளை நூலகம். படம்: எஸ்.கல்யாணசுந்தரம்
Updated on
1 min read

திருவெறும்பூரில் உள்ள கிளை நூலகத்துக்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் வாச கர்கள் அவதிக்குள்ளாகி வருகின் றனர்.

திருவெறும்பூர் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் கிளை நூலகம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் காலை 8 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படுகிறது. இங்கு ஏறத் தாழ 5 ஆயிரம் வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் பல்வேறு தலைப்புகளில் உள்ளன.

இந்த நூலகம் பேருந்து நிறுத்தம் அருகிலேயே அமைந்துள்ளதால், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து செல் கின்றனர். இந்தநிலையில், பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் தேவையின்றி பலர் வந்து செல்வதைத் தடுக் கும் வகையில், பிரதான வாயில் பகுதியில் இருந்த கேட் அகற் றப்பட்டு முழுவதுமாக சுற்றுச்சுவர் அண்மையில் கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக நூலகத்துக்கு வரும் வாசகர்கள் பெரும் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து கிளை நூலக வாசகர் வட்ட முன்னாள் செய லாளர் கோ.சண்முகவேலு, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

இந்த கிளை நூலகம் பேருந்து நிறுத்ததுக்கு அருகிலேயே உள்ள தால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என பலரும் நூல கத்துக்கு அதிக அளவில் வரத் தொடங்கினர்.

இந்நிலையில், நூலகத்துக்கு வரும் பிரதான வாயிலில் இருந்த கேட் அகற்றப்பட்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதால், வாசகர் கள் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் அருகேயுள்ள பகுதி வழியாகவே சுற்றி வர வேண்டியுள்ளது. மேலும், இரவு 7 மணி வரை நூலகம் செயல்படும் நிலையில், இந்த வளாகத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் வாசகர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பிரதான கேட் இருந்த பகுதியில் ரோலிங் கேட் அமைக்க வேண்டும் என பலமுறை முறையிட்டும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவ டிக்கை எடுக்கவில்லை. எனவே, வாசகர்களின் இந்த கோரிக் கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in