காவலர்களுக்கான 2-ம் கட்ட தேர்வு தொடக்கம் :

காவலர் பணியிடங்களுக்கு உடற்திறன்  தேர்வில் நீளம் தாண்டுதலில் பங்கேற்ற இளைஞர்.  படம்: வி.எம்.மணிநாதன்.
காவலர் பணியிடங்களுக்கு உடற்திறன் தேர்வில் நீளம் தாண்டுதலில் பங்கேற்ற இளைஞர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான 2-ம் கட்ட தேர்வுகள் நேற்று நடைபெற்றன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத் துறையினர் என காலியாக உள்ள 10,906 பணி யிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு வேலூரில் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கியது.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலூர் நேதாஜி மைதானத் தில் உடற்தகுதி தேர்வுகள் கடந்த ஒரு வாரத்துக்குமேலாக நடந்து வருகிறது. ஆண்களுக்கான தேர்தவில் 1,610 பேர் 2-ம் கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு வேலூரில் நேற்று தொடங்கியது.

இதில், 500 பேருக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. அதில், 493 பேர் வந்திருந்தனர். 7 பேர் வரவில்லை.

இதில், கயிறு ஏறுதல், 100 மீட்டர் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. கயிறு ஏறுதலில் ஏராளமான இளைஞர்கள் தடுமாறி, சிலர் சறுக்கிக் கீழே விழுந்தனர். பெண் காவலர்களுக்கான தேர்வில், இரண்டாம் கட்டமாக 354 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2-ம் கட்ட உடற்தகுதி தேர்வுகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடை பெறுவதால் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதி முழுவதும் பலத்த காவல் துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in