

கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, சேலம் தற்காலிக பேருந்து நிலைய வளாகம், சாலையோரக் கடைகள், ஜவுளிக் கடைகளில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, முகக் கவசம் அணிவது அவசியம், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கரோனாவில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரம் மற்றும் முகக் கவசத்தை பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
தொடர்ந்து, சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம் தெருவில் உள்ள ஜவுளிக் கடைகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர் சண்முக வடிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.