பாரம்பரிய நெல் ரக சாகுபடி பயிற்சி முகாம் :

பாரம்பரிய நெல் ரக சாகுபடி பயிற்சி முகாம் :
Updated on
1 min read

பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் பெருந்தலையூரில் பயிற்சி முகாம் நடந்தது. கோபி வேளாண்மை உதவி இயக்குநர் ஜீவதயாளன் தலைமை தாங்கினார்.

மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தின் வல்லுநர் பச்சியப்பன் இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வது, பஞ்சகவ்யா, பண்ணைக்கழிவு, கழிவுசிதைப்பான், மீன்அமிலம் போன்றவற்றை பயன்படுத்துவதைப் பற்றி விளக்கினார். இதன்பின்னர், முன்னோடி உழவர்கள் பாரம்பரிய நெல்சாகுபடி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கோபி வட்டார வேளாண்மை அலுவலர்கள் சிவப்பிரகாஷ், சந்திரசேகரன், கூகலூர் உதவி வேளாண்மை அலுவலர் குமார் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in