

தூத்துக்குடி நயினார்புரத்தைச் சேர்ந்த கொம்பையா மகன் யமாஹா முருகன் (எ) முருகன் (38).நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக இவரை தாளமுத்துநகர் போலீஸார் கடந்த 05.07.2021 அன்றுகைது செய்தனர்.
மணப்பாடு லயன்தெருவைச் சேர்ந்த ஜோசப் மகன்ரூபன் (39) என்பவரை கஞ்சாவிற்பனை செய்ததாக குலசேகரன்பட்டினம் போலீஸாரும், குரும்பூர் அருகேயுள்ள ராஜபதியை சேர்ந்த முத்துக்குமார் (28) என்பவரை ஒரு கொலை முயற்சி வழக்கில் ஆழ்வார்திருநதரி போலீஸாரும் கைது செய்தனர். எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், இம்மூவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர்செந்தில்ராஜ் உத்தரவிட்டார். மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கள்ளச்சந்தை தடுப்பு காவல்
இருவரையும் கள்ளச்சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவுமதுரை மண்டல எஸ்பி பாஸ்கரன்தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இருவரையும் கள்ளச்சந்தை தடுப்பு காவல்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டார். இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.