கரோனா விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு :

கரோனா விழிப்புணர்வு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு :
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா விழிப்புணர்வு பிரச்சார வாரம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கடைபிடிக்கப் படுகிறது.

இதையொட்டி, கோவை மாவட்டத்தில் நாள்தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “பொதுமக்களுக்கு கரோனா தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் தயாரித்தல், ஓவியம் வரைதல், வாசகம் எழுதுதல், மீம் உருவாக்குதல், துண்டு பிரசுரம் வடிவமைத்தல் ஆகிய போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் பொதுமக்கள் பங்கு பெற்று, தங்களது பெயர், முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றுடன் 9750554321 என்ற எண்ணுக்கு வரும் 6-ம் தேதி மாலை 4 மணிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த தேர்வுகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக வரும் 7-ம் தேதி பரிசுகள் வழங்கப்படும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in