

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை காணொலி காட்சி மூலம் நடந்தது.
திமுக மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். மாநில பொறியாளர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான துரை.கி. சரவணன், கடலூர் எம்பி ரமேஷ், கடலூர் எம்எல்ஏ ஐய்யப்பன், மாவட்ட பொருளாளர் குணசேகரன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், நாராயணசாமி, பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் வரும் 7-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கிளைகள் மற்றும் அனைத்து இடங்களிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்த வேண்டும். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.