சிவகங்கை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் - கழிப்பறைகளுக்கு மர்ம நபர்கள் பூட்டு :

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூட்டி இருக்கும் பெண்கள் கழிப்பறை.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூட்டி இருக்கும் பெண்கள் கழிப்பறை.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறைகளை மர்ம நபர்கள் பூட்டிச் சென்றதால் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கவும், அதிகாரிகளை சந்திக்கவும் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். திங்கட்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம், மாதந் தோறும் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம், நலத்திட்ட உதவிகள் பெறுவது ஆகிய வற்றுக்கு அதிக அளவில் மக்கள் வருவர். ஆனால் அவர்களுக்கு கழிப்பறை வசதி இல்லாமல் இருந்தது.

தொடர் கோரிக்கையை அடுத்து, கடந்த ஆண்டு டிசம்பரில் இரு பாலருக்கும் தனித்தனியாக கழிப்பறைகள் கட்டப்பட்டன. சில மாதங்களே திறந்திருந்த நிலையில் இரு கழிப்பறைகளையும் மர்ம நபர்கள் பூட்டிச் சென்றனர். தற்போது மக்கள் குறைதீர் கூட்டம் இல்லாவிட்டாலும், கரோனா கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் அதிக அளவில் மக்கள் மனு கொடுக்க வருகின்றனர். கழிப் பறைகள் இல்லாததால் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

மேலும் கழிப்பறைகளை பூட்டிய விவரம் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. இதனால் பூட்டை உடைத்தாவது மீண்டும் கழிப் பறைகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in