

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமை வகித்து, கைகளை கழுவும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுமார் 50 பேருக்கு அரிசிப்பை மற்றும் சானிடைசர், முகக்கவசம் வழங்கினார். டிஎஸ்பி கணேஷ், மத்தியபாகம் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி, நகர்நல மருத்துவர் தினேஷ் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே கை கழுவும் முறைகளைப் பற்றி விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ கல்லூரி டீன் டி.நேரு, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி கலந்துகொண்டு கைகளை கழுவுவது, முகக்கவசம் அணிவது குறித்து விளக்கினர்.